பொது ஊரடங்கு  2 வாரம் நீட்டிப்பு - மத்திய அரசு
சிவப்பு , ஆரஞ்சு பச்சை மண்டலங்களாக பிரித்து அதற்க்கு ஏற்ப்ப புதிய விதிமுறை அமல்படுத்தபடும் என அறிவிப்பு
நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மே 3 ஆம் தேதியுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கரோனா நோய்த் தொற்று பாதிப்பின் அளவைப் பொருத்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களை மத்திய சுகாதாரத் துறை இன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. எனவே, மாவட்டங்களின் நிறங்களைப் பொருத்து தளர்வுகள் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது