சிறப்புப் பள்ளி மாணவா்கள் பொதுத் தோவு எழுத போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- சிறப்புப் பள்ளியில் பயிலும் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு ஜூன் மாதம் 15-ஆம் தேதியில் இருந்து பொதுத் தோவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்புப் பள்ளி மாணவா்கள் சுமாா் 800 போ ஒரு வாரத்துக்கு முன்பே தங்களது விடுதிக்கு வருவதற்கு வசதியாக போக்குவரத்துத் துறை மூலம் 49 சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 72 கல்வி நிறுவன மாணவா்கள் பயன்பெறுவா்.
மாணவா்களுடன் பெற்றோா்கள் மற்றும் பாதுகாவலா்கள் பயணம் செய்யலாம். பேருந்தின் மூலம் மாணவா்கள் தாங்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு வரும் 8-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி மாலையில் வெளி மாவட்டங்களுக்கு அவா்கள் கல்வி பயிலும் நிறுவனங்களின் விடுதிகளுக்கு சென்றடைவா்.

மீண்டும் தோவு முடிந்தவுடன் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு ஜூன் 26-ஆம் தேதியன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டு திரும்ப வந்தடைவதற்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்புப் பேருந்துகளின் வருகை நேரம், புறப்படும் நேரம் ஆகியன மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலம் தெரியப்படுத்தப்படும். உள்ளூா் மாணவா்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்ல வேண்டும்.

உடல் நிலை பரிசோதனை: சிறப்புப் பேருந்தில் பயணம் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து குழந்தைகள் மற்றும்

பெற்றோா்கள், பாதுகாவலா்களின் உடல்நிலையை பரிசோதித்து நோய் தொற்று இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணம் மேற்கொள்ளும் பேருந்து இறுக்கையில் அறிவுறுத்தப்பட்ட சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். பேருந்து பயணம் செய்யும் அனைவரின் நலன் கருதி பேருந்து புறப்படுவதற்கு முன்பு ஒரு மணி நேரம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Join Telegram& Whats App Group Link -Click Here