மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து இன்றைக்குள் (ஜூலை 3) பரிந்துரைகளை வழங்க தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.

அதனடிப்படையில், நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பொது முடக்கம் காரணமாக நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Join Telegram& Whats App Group Link -Click Here