10th ,11th NR Preparation DGE Instruction -2020-21
2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை
முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு, EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்களுள், கீழ்க்காணும் தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
1. மாணவரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
2. பிறந்த தேதி
3. புகைப்படம்
4. பாலினம்
5. வகைப்பாடு (சாதி அடிப்படையிலான வகைப்பாடு)
6. மதம்
7. மாணவரின் பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
8. மாற்றுத் திறனாளி வகை
9. கைபேசி எண்
10. பாடத் தொகுப்பு - Group Code (+1 மாணவர்களுக்கு மட்டும்)
11. பயிற்று மொழி (Medium Of Instruction)
12. மாணாக்கரின் வீட்டு முகவரி
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் (27.01.2021) முதல் 06.02.2021 வரையிலான நாட்களில் EMIS –ல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் PASSWORD – ஐ பயன்படுத்தி, EMIS Portal ல் சென்று தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களது மேற்குறிப்பிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதனையும், மாணவரின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் மற்றும் பாடத்தொகுப்பு ஆகிய விவரங்கள் பின்வருமாறு உள்ளதா என்பதனையும் சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் உடன் திருத்தத்தினை மேற்கொள்ளவேண்டும்
10th ,11th NR Preparation DGE Instruction PDF
திருத்தம் செய்யும் பணியினை முடித்த பின்பு, தலைமையாசிரியர்கள் 01.02.2021 முதல் 11.02.2021 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் www.dge.tn.gov.in) சென்று, இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி, மாணாக்கரது விவரங்களை சரிபார்த்து கூடுதல் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..