பொங்கல் பிறகு பள்ளி திறக்க கருத்துகேட்பு கூட்டம் – இயக்குநர் செயல்முறை 

தமிழகஅரசு அறிவித்ததற்கிணங்க நவம்பர் 16 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பெற்றோர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தற்காலிகமாக பள்ளி திறப்பது தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விநலன் கருதி பொதுதேர்வு எதிர்கொள்ள ஏதுவாக மாணவர்களை தயார் செய்யவேண்டும் என்பதால், பள்ளி திறந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் கற்பிப்பது இன்றியமையாதது ஆகும். எனவே 08.01.2021 வரை அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் இத்துடன் இணைக்கப்பபட்டுள்ள வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறப்பது சார்ந்து கருத்துகேட்பு கூட்டம் பள்ளிகளின் வசதிக்கேற்ப நடத்தப்பட வேண்டும் என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DSE –Proceeding School Reopen For   04.01.2021


 (SOP) for Health, Hygiene and Safety Protocols for reopening of Schools




Join Telegram& Whats App Group