Election Training Model -2021


தமிழகத்தின் 15வது சட்டமன்ற காலமானது வரும் மே மாதம் 24 ஆம் தேதியன்று முடிவடைகிறது. பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தலானது வரும் ஏப்ரல் 6 2021 அன்று 234 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது.


தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் மாதம் 12ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான தேதி மார்ச் 21 ஆகவும், தேர்தல் நடைபெறும் நாள் ஏப்ரல் 6-ஆம் தேதி, வாக்கு எண்ணும் நாள் மே 2 ஆம் தேதி ஆகும்.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் ஆணையத்தால் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் ஆணையம் இவர்களுக்கு வரும் மார்ச் 18ஆம் தேதி முதல் 3 கட்டமாக பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட பயிற்சியானது வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நிலையில் நிலை 1,2,3,4 ஆகியோருக்கு தனித்தனியாக நடப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Assembly And bye Election Training Schedule -2021

இரண்டாம் கட்ட பயிற்சியானது அந்தந்த தொகுதியில் அனைத்து தேர்தல் அலுவலகர்களுக்கு ஒருசேர பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது, மூன்றாம் கட்ட பயிற்சியின் போது இரண்டு கட்ட பயிற்சிக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்யப்படும். மேலும் கணினி மூலம் குலுக்கல் முறை நடத்தி  தேர்தல் பணிக்கான ஆணை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.



TN Election -2021  Error Evm And VVPAT 




இந்தப் பதிவில் தேர்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேவையான பல்வேறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளியிடும் பயிற்சி புத்தகங்கள் பதிவிடப்படுகிறது.