தகவல் அறியும் உரிமைசட்டத்தின் படி கீழ்கண்ட தகவல்கள் முதன்மை கல்வி அலுவலர் வேலூர் அவர்களால் அணுப்பட்டுள்ளது 


1.பள்ளியில் பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ பணிவரன்முறை/ தகுதிகாண்‌ பருவம்‌ / தேர்வுநிலை / சிறப்புயநிலை கருத்துரு படிவங்களை தயார்‌ செய்வது முதல்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலகத்தில்‌ ஒப்படைப்பு வரை யாருடைய வேலை என்ற தகவலுக்கு 

பதில்‌  - சம்மந்தப்பட்ட பள்ளி அலுவலகத்தை சார்ந்தது 


2.ஆசிரியர்களின்‌ பணிவரன்முறை / தகுதிகாண்‌ பருவம்‌ / தேர்வுநிலை மற்றும்‌ சிறப்புநிலை போன்றவற்றிக்கு  சம்பந்தப்பட்ட ஆசிரியரின்‌ சான்றிதழ்‌ பணிப்பதிவேடு  நகல்‌ எடுப்பதற்கான செலவினங்களை மேற்கொள்வது சம்மந்தப்பட்ட ஆசிரியரா (அ) பள்ளி நிர்வாகமா 

 பதில் -சம்மந்தபட்ட ஆசிரியர் 


3.ஆசிரியர்களின்‌ பணி வரன்முறை / தகுதிகாண்‌ பருவம்‌ / தேர்வுநிலை மற்றும்‌ சிறப்புநிலை கருத்துரு படிவங்கள்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலகத்தில்‌ ஒப்‌படைத்த  நாளிலிருந்து எத்தனை நாளுக்குள்‌ அதற்குரிய ஆணை பிறப்பித்து வழங்குவீர்கள்‌ என்ற தகவலுக்கு 

பதில் -அலுவலக நிர்வாகம் சம்மந்தப்பட்டது 


4.பள்ளி மாணவரின்‌ விவரங்கள்‌ (EMIS) உள்ளீடு செய்வதற்கான விவரங்களை சேகரிப்பது மற்றும்‌ உள்ளீடு செய்வது யாருடைய பொறுப்பு என்ற தகவலுக்கு 

பதில் - பள்ளி மையBRC பணியாளர் 


5.பள்ளியில்‌ ஆய்வக  உதவியாளர்‌ பள்ளியில்‌ எந்தவிதமான பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்ற தகவலை  தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்‌,  

பதில் - பள்ளி ஆய்வக பணிகள் மற்றும் தலைமையாசிரியர் பள்ளி சார்பாக மேற்கொள்ள தெரிவிக்கும் பணிகள் 


6.பள்ளி வேலை நேரத்தில்‌ அலுவலக ஊழியர்கள்‌ முதன்மை கல்வி அலுவலகம்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலகத்திற்கு வரலாமா (அ) பள்ளி வேலை நேரம்‌ முடிந்த பின்பு வரலாமா என்ற தகவலை தெளிவுபடுத்தும்‌ -

பதில்  -பள்ளி வேலை நேரம் முடிந்த பின்பு வரலாம் 

7.மாணவர்களுடைய மாத வருகைப்‌ பதிவேடு எழுதுவது மாணவர்களுடைய வருகை பதிவேட்டில் மாணவர்கள்  சுய விவரங்கள்‌ எழுதுவது வகுப்பு ஆசிரியரா அல்லது பள்ளி  அலுவலகமா  என்ற தகவலை தெளிவு படுத்தும்பட கோருகின்றேன்‌, 

பதில் - பள்ளி அலுவலக பணியாளர்கள்


8.மேல்நிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ வாரத்திற்க்கு  குறைந்தபட்சம்‌ எத்தனை பாடவேளை எடுக்க வேண்டுமென்ற தகவலை தெரிவிக்கும்படி கோருகின்றேன்‌ 

பதில் -14 பாட வேளை