துறைத் தேர்வு இனி கணினி வழி தேர்வாக நடை பெறும் –TNPSC  அறிவிப்பு 

இனி வரும் காலங்களில் கொள்குறி வகை தேர்வுகள்  கணினி வழியில் நடைபெறும், விரிந்துரைக்கும் வினாக்கள் கொண்ட தேர்வு பழைய முறையில் நடை பெறும்.

துறை தேர்வு ஜீன் 2021 முதல் கணினி வழித் தேர்வு அறிமுகபடுத்தியது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரியம்

  • அதன் படி கொள்குறிவகை தேர்வுக்கான துறைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடைபெறும் 
  • விரிந்துரைக்கும் வகையிலான துறைத் தேர்வுகள் தற்போதுள்ள நடைமுறையான் எழுத்து தேர்வு வகையில் நடைபெறும்.
  • கொள்குறிவகை மற்றும்‌ விரிந்துரைக்கும்‌ வகை எழுத்துத்‌ தேர்வுகளை கட்டாயமாக ஒருங்கிணைத்து எழுத வேண்டிய துறைத்‌ தேர்வுகளை பொருத்தமட்டில்‌ தேர்வர்கள்‌ கொள்குறிவகையிலான கணினி வழித்‌ தேர்வு மற்றும்‌ விரிந்துரைக்கும்‌ வகை எழுத்துத்‌ தேர்வுகளுக்கு  தனித்தனியே தேர்வெழுத வேண்டும்‌. 2017 ஆம் ஆண்டு திருத்தியமைக்கபட்ட  பாடத்திட்டம்‌ மற்றும்‌  மேற் கண்ட தேர்வு முறை நடைபெறவிருக்கும்.

TNPSC -Department Exam-press News Pdf 


துறைத்தேர்வுகளிலிருந்து உத்தேசமாக பின்வருமாறு நடத்தப்படவுள்ளது

  • கணினி வழித் தேர்வுகள் 22.06.2021 முதல் 26.06.2021 வரையில் நடைபெறும் 
  •  விரிந்துரைக்கும் வகை எழுத்து  தேர்வுகள்  27.06.2021 முதல் நடைபெறும்