Kalvi TV - Telecasting Instructions , Schedule And Register  Form


அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு பயன்பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள்.




KALVI TV REGISTER - FORM IN PDF 

கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (28.02.22 முதல் 25.03.22 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை Full Month kalvi tv time table



கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (03.01.22 முதல் 31.01.22 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை Full Month kalvi tv time table

1 Std to 10 Std  Kalvi Tv Telecast Schedule -03.01.2022 to 31.01.2022  in Pdf 



கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (29.11.21 முதல் 31.12.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை Full Month kalvi tv time table



கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (01.11.21 முதல் 26.11.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை Full Month kalvi tv time table



கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (02.10.21 முதல் 29.10.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை Full Month kalvi tv time table



கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (06.09.21 முதல் 01.10.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை Full Month kalvi tv time table

1 Std to 10 Std  Kalvi Tv Telecast Schedule -06.09.2021 to 01.10.2021  in Pdf 




கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (02.08.21 முதல் 27.08.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை Full Month kalvi tv time table



கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (02.08.21 முதல் 08.08.21 வரை kalvi tv time table) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை




கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (26.7.21 முதல் 30.7.21 வரைkalvi tv time table ) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை




கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (19.7.21 முதல் 23.7.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை



கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (21.6.21 முதல் 16.7.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை-4  வாரம்


கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (12.7.21 முதல் 16.7.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை

1 Std to 10 Std  Kalvi Tv Telecast Schedule -12.07.2021 to 16.07.2021  in Pdf 

கல்வித் தொலைக்காட்சியில் பாட வாரியாக மற்றும் நாள் வாரியாக பாடத் தலைப்பு (05.7.21 முதல் 09.7.21 வரை) வகுப்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை

1 Std to 10 Std  Kalvi Tv Telecast Schedule -05.07.2021 to 09.07.2021  in Pdf 


1 Std to 10 Std  Kalvi Tv Telecast Schedule -21.06.2021 to 16.07.2021  in Pdf - 4 WEEKS


பள்ளி கல்வி ஆணையர் அவர்கள செயல்முறை நாள்:  -PDF

Kalvi TV – Telecasting  Time Table -2021-2022

Kalvi TV – Telecasting  TV List And Schedule  -2021-2022


ஒவ்வொரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளின் கால அட்டவணையினை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்.  மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் சென்றடையும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் கால அட்டவணை ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையிலும் அனைவரின் பார்வையிலும் படும்படியான இடத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.


ஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் கல்வி நிகழ்ச்சிகள் குறித்த தகவல் அடங்கிய கால அட்டவணையினை அனைத்து மாணவர்களையும் சென்றடையும் வகையில் அவர்களின் பெற்றோர்களுடைய அலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆசிரியர்கள் அனுப்பிட வேண்டும். வாட்ஸ்... அப் எண் இல்லாத மாணாக்கர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள், பாடநூல்களை வாங்க பள்ளிக்கு வரும் போது, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையின் ஒரு பிரதியை நகலெடுத்து ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.


ஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் கல்வி நிகழ்ச்சிகள் குறித்த தகவல் அடங்கிய கால அட்டவணையின் விவரம் ஆசிரியர்கள் வாயிலாக சரியாக பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்ட்ள்ளதா என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து உறுதி செய்வதுடன் அதன் அறிக்கை விவரத்தினை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கிட வேண்டும்.


குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளுக்குரிய கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தொடர்புடைய மாணவர்கள் கண்டு பயன்பெறுவதை வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்வதுடன், மாணாக்கர் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தவறாது பார்க்கும் வகையில் ஆர்வமூட்டி ஆசிரியர்கள் ஊக்குவித்திட வேண்டும்.


 கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளை மாணாக்கர் பார்த்து பயன்பெறும்வேளையில் அவர்களுக்கு கற்றல் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உரிய ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். (இதற்காக பள்ளி ஆசிரியர்களின் அலைபேசி எண்கள் மாணாக்கர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்) மேலும், ஆசிரியர்களும் மாணாக்கர்களின் அத்தகைய செயல்பாட்டை வரவேற்று அவர்களின் ஐயங்களை களைந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


 கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளின் அடிப்படையில், நடத்தப்பட்ட பாடங்களுக்குரிய ஒப்படைப்புகள் (சாகு) சார்ந்த ஆசிரியர்களால் பெற்றோர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பப்பட வேண்டும். வாட்ஸ் அப் எண் இல்லாத மாணாக்கர்களுக்கு அவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு நேரடியாக வரவழைத்து அவ்விவரங்களை கொடுத்தனுப்ப வேண்டும்.


 அவ்வாறு கொடுக்கப்பட்ட ஒப்படைப்புகளுக்கு உரிய பதில் விவரங்களை வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் பெற்றோர்கள் நேரடியாக கொடுத்துச் செல்ல ஊக்கப்படுத்த வேண்டும்.


உரிய கால இடைவெளியில் அந்த ஒப்படைப்புகளை சார்ந்த ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து மீளவும் பெற்றோர் வழியாக மாணாக்கர்களுக்கு கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


 இத்தகைய ஒப்படைப்பு மாதத்திற்கு ஒரு பாடத்திற்கு ஒரு பயிற்சி என்ற அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் வரையில் இத்தகைய நடவடிக்கைகள் தொடரவேண்டும்.


$ கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி நிகழ்ச்சிகளை ஏதேனும் காரணங்களினால் கண்டுற தவறும் மாணாக்கர்களுக்காகவும், பாட விவரங்களை மீண்டும் ஒரு முறை ஐயமின்றி நன்கு கற்பதற்காகவும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி நிகழ்ச்சிகள் அனைத்தும் You tube Channel) http://www youtube. com/ckalvitvofficial என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்படும். இவற்றை மாணாக்கர்களின் பெற்றோர்கள் தங்களது அலைபேசி அல்லது கணினியில் பார்த்து கண்டுறுவதற்கு தேவையான ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கிட வேண்டும்.


மாணாக்கர்களின் பெற்றோர்கள் தங்களது அலைபேசி அல்லது கணினியில்பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை காட்சிகளாகவோ அல்லது விடியோக்களைபதிவிறக்கம் செய்தோ தமது குழந்தைகளுக்கு மீள காட்சிபடுத்தி காட்ட முடியும் என்றவிவரத்தினை மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உரிய முறையில் ஆசிரியர்கள்தெரிவித்திட வேண்டும்.


மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைப்புகள் மற்றும் அவற்றை மதிப்பீடுசெய்யப்பட்ட விவரங்களை ஆசிரியர்கள் முறையாக தங்களது பதிவேடுகளில் பதிவுசெய்து பராமரித்திட வேண்டும்.