Polytechnic Colleges Admission Go No 125

தொழில்நுட்பக்‌ கல்வித்‌ துறை - பலவகை தொழில்நுட்ப கல்வி  --2021-2022- ஆம்‌ கல்வியாண்டு முதலாமாண்டு பட்டயப்‌ படிப்பு மாணாக்கர்‌ சேர்க்கை  குறித்து அரசானை (Polytechnic Colleges Admission Go)தமிழக அரசு வெளியிட்டுள்ளது .

கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடபட்டு பின்பு பெற்றோர்கள் ஒப்புதல் உடன் சில மாதங்கள் 9 முதல் 12 வகுப்பு வரை  வகுப்புகள் நடத்த பட்டது பின்பு கொரானா இரண்டாம் அலையின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடபட்டது . அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு ரத்து செய்யபட்டது .

10,12 வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில்வ் 12 மாணவர்கள் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி படிக்க அவர்கள் 10 ,11,வகுப்பு மதிப்பெண் ,12 ஆம் வகுப்பு அகமதிப்பீடு  மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் முறை தமிழக அரசு அறிவித்தது 

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி தேர்ச்சி என வழங்கப்படும் என அறிவித்த நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை மற்றும் போன்ற படிப்பு களுக்கு 9 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்கை நடத்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .  11ஆம் வகுப்பு சேர்க்கைகான வழிகாட்டல் நெறிமுறை முன்பே அரசு வெளியிட்டுள்ளது 

Polytechnic Colleges Admission Go No 125  உயர்கல்வி துறை நாள் 25.06.2021

தற்போது பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (Polytechnic Colleges )மற்றும் தொழிற்பயிற்சி நிறுவங்கள் (Industrial Training Institutes) மாணவர்கள் சேர்க்கை 9  ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்  மேற்கொள்ள அனுமதித்து தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுளது