செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

NEET Online Registration-2021


நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மே மாதத்தில் தேசிய தேர்வு முகமை நடத்திவரும் இந்தத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மார்ச் மாதம் அறிவிக்கபட்ட நிலையில்  கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமான காரணத்தினால் ஒத்திவைக்கபட்டது. 

இந்நிலையில் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த முறையை விட அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 198 நகரங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (13-07-2021) மாலை 5 மணி முதல் மாணவர்கள் நீட் தேர்விற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.