10Th ,11Th  Supplementary exam-2021 Notification And Time Table.


செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் 07.08.2021 காலை 11.30 மணி முதல் 11.08.2021 வரையிலான நாட்களில் (07.08.2021 தவிர மற்ற நாட்களில் காலை 10.00 மணி முதல் 05.45 மணி வரை - 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service centres) வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும். 

10Th ,11Th  Supplementary exam-2021 Notification And Time Table.PDF 

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கும் தேர்வர்களின் கவனத்திற்கு

முதல் முறையாக நேரடி தனித்தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுத விரும்புவோர்மற்றும் 2012-ஆம் ஆண்டுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் 07.08.2021 காலை 11.30 மணி முதல் 11.08.2021 மாலை 05.45 மணி வரையிலான நாட்களில் (08.08.2021 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) 2021 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க  அனுமதி வழங்கப்படுகிறது.மேற்குறிப்பிட்ட தேர்வர்கள் சேவை மையங்கள் வாயிலாக தேர்வெழுத விண்ணப்பித்த பின்,விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டுடன் 12.08.2021 முதல் 17.08.2021 வரையிலானநாட்களில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று அறிவியல் பாடசெய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு கட்டணம் ரூ.125/-ஐ செலுத்தி தங்களது பெயரை  பதிவு செய்து கொள்ள வேண்டும்.


பத்தாம் வகுப்புத் தேர்வுக் கட்டணம்:-

1. தேர்வுக் கட்டணம் ரூ.125/-

2. ஆன்-லைன் பதிவுகட்டணம் ரூ.50/-

மொத்தக் கட்டணம் ரூ.175/-


மேல்நிலைமுதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கும் தேர்வர்களின் கவனத்திற்கு


முதன்முறையாக மேல்நிலை முதலாம் ஆண்டு மேல்நிலைத் தேர்வினை தனித்தேர்வராக தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்களும் ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத பாடங்களில் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை :

1. ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள்

ஓவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/- வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ35/-ம் செலுத்தவேண்டும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50

2. மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வினை முதன் முறையாக எழுதவுள்ள தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.150/- இதரக் கட்டணம் ரூ.35/- மொத்தம் ரூ.185/- ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-