Departmental Examination-Answer Keys


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ அறிவிக்கை எண்‌. 01/2021. நாள்‌:08.01.2021-ன்‌ படி அறிவிக்கப்பட்ட 153 துறைத்‌ தேர்வுகள்‌ கடந்த 16.08.2021 முதல்‌ 27.08.2021 வரை (19.08.2021 முதல்‌ 22.08.2021 நீங்கலாக) கொள்குறிவகை. விரிந்துரைக்கும்‌ வகை, கொள்குறிவகை மற்றும்‌ விரிந்துரைக்கும்‌ வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும்‌ டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில்‌ நடைபெற்றன.

 இத்தேர்வின்‌ கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின்‌ உத்தேச விடைகளை தேர்வாணையம்‌ இணையதளத்தில்‌ 25.09.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

துறைத்‌ தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள்‌ அவரவர்‌ எழுதிய கொள்குறி வகை தேர்வின்‌ விடைகளை தேர்வாணைய இணையதளத்தில்‌ சரிபார்த்துக்‌ கொள்ளலாம்‌. உத்தேச விடைகள்‌ மீது மறுப்பு ஏதேனும்‌ இருப்பின்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள்‌ (26.09.2021 முதல்‌ 02.10.2021 அன்று மாலை 5.45 மணிவரை) விண்ணப்பதாரர்கள்‌ அவர்தம்‌ தேர்வு நுழைவு ட்டு நகல்‌, பதிவு எண்‌,தேர்வின்‌ பெயர்‌, தேர்வு குறியீட்டு எண்‌, வினா எண்‌, அவ்வினாவின்‌ உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர்‌ கூறும்‌ விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு  மின்னஞ்சல்‌ முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்‌ தங்களுடைய மனுக்களை அனுப்பலாம்‌.


Departmental Examination-Tentative Answer Keys(Objective)-May 2021

தேர்வு நடைபெற்ற நாட்கள்  - 16/08/2021 to 18/08/2021 and 23/08/2021 to 27/08/2021


65- Edu Dept-TN School Education Admn Test Paper-I  

72- Edu Dept-TN School Education Admn Test Paper II

124 Account Test for Subordinate Officers Part-I

152 Account Test for Executive Officers

172 Tamil Nadu Government Office Manual Test

Other Test Code May 2021


May 2021 Departmental Exam Answer Key ,Departmental Exam May 2021  Answer Key, tnpsc departmental exam answer key  May 2021  ,tnpsc departmental exam answer key 2021 pdf download|tnpsc departmental exam 2021 result tnpsc departmental exam december 2021|tnpsc departmental exam May 2021