School Reopen Instruction  Co-curricular activities , Extra-curricular activities ,Model Time Table  


மாதிரிப் பாட வேளை 





அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 2022- 23-ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில்  மன்றங்கள் / சங்கங்கள் / கலைச் செயல்பாடுகள் புதுப்பிக்கபட்டுள்ளது 


School Reopen Instruction  Co-curricular activities , Extra-curricular activities ,Model Time Table  All Class 1Std to 12Th 


School Reopen   Co-curricular activities , Extra-curricular activities Instruction Pdf -Download
School calendar  2022-2023 Pdf  -Download
1st -3rd  Model Time Table Pdf -Download
4th -3th  Model Time Table Pdf -Download
6th -10th  Model Time Table Pdf -Download
11Th  Model Time Table Pdf -Download
12Th  Model Time Table Pdf -Download




பாடவேளை பங்கீடு

தமிழ் 6
ஆங்கிலம் 6
கணிதம் 7
அறிவியல் 7
சமூகஅறிவியல் 6
கல்விசார் செயல்பாடு 2
கல்விசாரா செயல்பாடு 2
உடற்கல்வி 2
நீதிபோதனை 1
நூலகம் 1

ஆக மொத்தம் 40

ஒவ்வொரு வாரமும் கலைச் செயல்பாடுகளுக்கென ((Art and Culture) இரு பாடவேளைகளும், மன்றச் செயல்பாடுகளுக்கென (Club Activities)) இரு பாடவேளைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இச்செயல்பாடுகள் பள்ளி வவேலை நேரத்தில் அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன:


 (Co-curricular activities)


1. மன்ற செயல்பாடுகளை பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சிறப்பாகச் செயல்படுத்த எதுவாக மாதிரிக் கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது பள்ளிகள் தங்கள் தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப வாரத்தின் ஏதாவது ஒரு நாளில் கடைசி இரு பாடவேளைகளில் இச்செயல்பாடுகளைத் திட்டமிடலாம்.


2. இச்செயல்பாடுகள் அனைத்தும் அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படுதல் வேண்டும். ஒவ்வாரு மாணவரும் அவர்தம் விருப்பத்திற்கேற்ப அனைத்துச் செயல்பாடுகளிலும் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும்.

3. அனைத்து ஆசிரியர்களையும் மன்றச் செயல்பாடுகளில் சுழற்சி முறையில் ஈடுபடுத்துதல் வேண்டும். தேவைப்படின், ஒரே மன்றத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், ஒரே ஆசிரியரை ஒன்றுக்கு மேற்பட்ட மன்றங்களுக்கும் பொறுப்பாசிரியராக்கலாம்.


4.இலக்கிய மன்றத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களையும், வினாடி வினா மன்றத்திற்கு கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்களையும், சுற்றுச்சூழல் மன்றத்திற்குண/ சமூக அறிவியல் ஆசிரியரையும் வகுப்பு வாரியாக பொறுப்பாசிரியாராக நியமிக்கலாம். எனினும், ஆசிரியர்களைத் தெரிவு செய்யும்போது அவர்தம் ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கேற்ப முன்னுரிமை அளித்து நியமிக்கலாம்.


5. மன்றச் செயல்பாடுகள் மற்றும் நூலக செயல்பாடுகளுக்கென ஆசிரியர்கள் செலவிடும் பாடவேளையையும் அவர்தம் பணி நேரமாகக்கொண்டு ஆசிரியர்களுக்கான பணிப்பகிர்வு காலஅட்டவணையை உருவாக்க வேண்டும்.


6. மன்ற செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், மாதத்தின் முதல் வாரத்தில் இலக்கிய மன்றமும் இரண்டாவது வாரத்தில் வினாடிவினா மன்றமும் மூன்றாவது வாரத்தில் சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளுக்கென எடுத்துக்கொண்டு மீதமுள்ள ஒரு / இரு வாரத்திற்கு பள்ளியின்

விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு முறையும்  கொடுக்கப்பட்டுள்ள பிற மன்றங்களில் எதேனும் ஒரு மன்ற செயல்பாட்டினை தெரிவு செய்து நடத்திக்  கொள்ளலாம்.


7. இலக்கிய மன்றத்தின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வாயிலாக மாணவர்களை கதை, கட்டுரை, கவிதை மற்றும் பட்டிமன்றம் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடச் செய்யலாம். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைடுபறும் இலக்கிய முகாம் மற்றும் போட்டிகளில் பங்கேற்பர். இம்முகாமில் தமிழ்நாட்டிலுள்ள தலைசிறந்த எழுத்தாளர்கள் மாணவர்களைச் சந்தித்து உரையாடுவர். இலக்கிய மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் சுமார் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் "கவிமணி விருது'' வழங்கப்படும்.


8. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் நடைபெறும் வினாடி வினா மன்றத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவையான பொது அறிவுப் புதிர்களை மாணவர்களே தயாரித்து வா உற்சாகப்படுத்தலாம். மாண்புமிகரு அமைச்சரால் அறிவிக்கப்பட்டு விரைவில் இவளிவர இருக்கும் ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு போன்ற சிறார் இதழ்களிலிருந்தும் நூலகபாடவேளைகளில் மாணவர் வீட்டிற்கேண/ எடுத்துச்சென்று படிக்கும் நூல்களிலிருந்தும் பொது அறிவு சார்ந்த வினாக்களைக் கேட்க மாணவர்களை ஊக்கப்படுத்தலாம். பள்ளி அளவில் நடத்தப்படும் வினாடி வினா போட்டிகளில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைப்பெறும் போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் இவ்வாறு வெற்றி பெறும் சுமார் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.


9. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் சுற்றுச்சூழல் மன்றம் / தேசிய பசுமைப்படைச் செயல்பாடுகளை இணைத்துத் திட்டமிடலாம். உலக உயிரின நிதியம் (World Wildlife Fund) மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  (Tamil Nadu Pollution Control Board) இணைந்து பசுமைப் பள்ளித் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் சூறித்து விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் தனியே அனுப்பிவைக்கப்படும். இத்திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தும் பள்ளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பசுமை முதன்மையாளர் விருது (Green  Champions Award) வழங்கப்படும்