பள்ளி மற்றும்‌ பொதுயிடங்களில்‌ குழந்தைகளின்‌ செயல்கள்‌ மற்றும்‌ குழந்தைகளை கையாளும்‌ பரிந்துரைகள்‌ - தமிழ்நாடு குழந்தை உரிமைகள்‌ பாதுகாப்பு ஆணையம்‌

தமிழ்நாடு குழந்தை உரிமைகள்‌ பாதுகாப்பு ஆணையம்‌ பரிந்துரைகள்‌ Pdf 

ஒரு குழந்தை பன்ளிச்‌ சொத்துகளுக்கு சேதம்‌ விளைவித்தால்‌ சேதமடைந்த பொருளை குழந்தையின்‌ பெற்றோர்‌/ பாதுகாவலர்‌ மாற்றி அமைத்துத்தர வேண்டும்‌


குழந்தைகள்‌ பெரும்பாலும்‌ செய்யும்‌ தவறுகள்‌ பின்வருமாறு


  • பொது போக்குவாத்தில்‌ தொங்கிக்‌ கொண்டு பயணம்‌ செய்தல்‌.
  • பொது இடங்களில்‌ இடையூறு ஏற்படுத்துதல்‌
  • ஆசிரியர்களை அவமதித்தல்‌.
  • மற்ற குழந்தைகளை அடித்தல்‌ / பகடிவதை ராக்கிங்‌) செய்தல்‌. புகைப்பிடித்தல்‌, போதைப்‌ பொருள்‌ பயன்படுத்துதல்‌,மது அருந்துதல்‌.
  • ஆசிரியர்களை உடல்ரீதியாக காயப்படுத்துதல்‌ /அச்சுறுத்துதல்‌.
  • பள்ளிக்கு இரு சக்கர வானத்தை ஓட்டி வருவது.
  • வகுப்பு நேரங்களில்‌ வீடியோ ரீஸ்களை உருவாக்குதல்‌.
  • சாதி, மதம்‌, பொருளாதர நிலை ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ மற்ற
  • குழந்தைகள்‌, பணியாளர்களை பாகுபாடு: புண்படுத்துதல்‌.
  • உருவகேலி செய்தல்‌.
  • பள்ளி சுவர்களில்‌ தவறான வார்த்தை படங்களை எழுதுதல்‌.
  • தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல்‌.

 ஏதேனும்‌ குழந்தை மேற்கூறிய செயல்களில்‌ ஈடுபட்டால்‌ பள்ளி ஆலோசகர்‌ முதலில்‌ தக்க ஆலோசனைகள்‌ வழங்க வேண்டும்‌. மேலும்‌, இதே குழந்தை 2வது மற்றும்‌ 3 வது முறையாக தவறு செய்தால்‌ பின்வருமாறு ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள்‌ கையாளலாம்‌

  • ஐந்து திருக்குறளை படித்து பொருளோடு ஆசிரியரிடம்‌ எழுதி காட்ட வேண்டும்‌.
  • இரண்டு நீதிக்கதைகளை பெற்றோர்களிடமிருந்து கற்று வகுப்பறையில்‌ சொல்ல வேண்டும்‌.
  • ஐந்து செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில்‌ ஒரு வாரத்திற்கு படித்து காட்ட வேண்டும்‌
  • வகுப்பு மாணவர்களை ஒழுங்குபடுத்த ஒரு வாரத்திற்கு வகுப்பின்‌ தலைவராக பொறுப்பேற்க வேண்டும்‌.
  • ஐந்து வரலாற்று தலைவர்களைப்‌ பற்றி அறிந்துகொண்டு வகுப்பறையில்‌ எடுத்துரைக்க வேண்டும்‌,
  • சிறந்த ஆளுைகளின்‌ உண்மை கதையை கற்றுக்‌ கொண்டு வகுப்பறையில்‌ மாணவர்களிடம்‌ விளக்க வேண்டும்‌.
  • நல்ல பழக்கவழக்கங்களை பற்றிய வரைபடம்‌ (சாட்‌) எழுதுதல்‌.
  • பாதுகாப்பு மற்றும்‌ முதலுதவி பற்றிய வரைபடம்‌ (சாட்‌) எழுதுதல்‌.
  • சிறிய காய்‌, கனி தோட்டம்‌ பள்ளியில்‌ அமைத்தல்‌
  • 1098 பற்றிய விழிப்புணர்வு வரைபடம்‌ (சாட்‌) எழுதுதல்‌.