11Th ,12Th Time Table For Higher Education Guidance Class

11 & 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டல் வகுப்புகள் - கால அட்டவணை (Time Table) ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

Cose Proceeding  For 11Th ,12Th Time Table For Higher Education Guidance Class  Download 

1. கீழுள்ள உத்தேச அட்டவணைப்படி 11, 12ஆம்‌ வகுப்புகளுக்கு பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்‌.

2. உயர்கல்வி வேலைவாய்ப்பு சிறப்பு வகுப்புகளுக்கான புத்தகங்கள்‌ மாணவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்‌ வரும்‌ செப்டம்பர்‌ 7, 2022 முதல்‌ வகுப்புகள்‌ ஒதுக்கீடு செய்து தினசரி பள்ளி கால அட்டவணையில்‌ இணைத்து ஆசிரியர்களுக்கு கீழ்‌ காணுமாறு வழங்க வேண்டும்‌.

3. இணைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகத்தின்‌ பாடத்‌ திட்டப்படி வகுப்புகள்‌ நடத்தப்பட வேண்டும்‌.

4. உயர்‌ கல்விக்கான வழிகாட்டுதல்களை வழங்க இணைய வழியே துறைசார்‌ வல்லுநர்கள்‌ வழங்க இருக்கின்றனர்‌. அந்த ஆலோசனை நிகழ்ச்சிகளை  வழங்கப்பட்டுள்ள பாட வேளைகளில்‌ மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும்‌ .


5. உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்புகள்‌ பள்ளியின்‌ உயர்‌ தொழில்நுட்ப கணினி ஆய்வகம்‌ அல்லது திறன்‌ வகுப்பறை அல்லது ஒளிப்படவிழ்த்தி  அறை ஏதேனும்‌ இருப்பின்‌ அங்கு நடத்தப்பட வேண்டும்‌.