Quarterly Exam Leave For Tamil Nadu -2022
30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்.)
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல்12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடக்கப்பள்ளிகளில் 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10,11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் எனஅறிவுறுத்தப்படுகின்றது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..