Mental health and life skills training for class 9Th to 12Th and teacher's manual |9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மனநலம் மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சி மற்றும் ஆசிரியர் கையேடு




தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 9 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு மனநலம்‌   மற்றும்‌ வாழ்வியல்‌ திறன்‌ பயிற்சிகள்‌ வழங்கப்படும்‌" எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிலுள்ள 44 கல்வியில்‌ பின்தங்கிய வட்டாரங்களில்‌ உள்ள அரச மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 9 முதல்‌ 12 -ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌, ஆசிரியர்களுக்கும்‌ மனநலம்‌ மற்றும்‌ வாழ்வியல்‌ திறன்‌ சார்ந்த பயிற்சி 2022 - 2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ வழங்கப்பட்டுள்ளது. 

இதற்காக உருவாக்கப்பட்ட மாணவர்‌ கையேட்டில்‌ வடிவமைக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை தற்போது மின்னுருவாக்கம்‌ (Digitalized) செய்து கல்வித்‌ தகவல்‌ மேலாண்மைத்‌ தொகுப்பமைப்பு இணையதளத்தில்‌ (EMIS) பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது

Mental health and life skills  Student Portal link 


மனநலம்‌ மற்றும்‌ வாழ்வியல்‌ திறன்‌ சார்ந்த பயிற்சி உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தின்‌ மூலம்‌ கணினி வாயிலாக அளித்தல்‌  SPD & SCERT Co-Proceedings -Download 

Emotional Well-being & Life-skills Program And Program Schedule_9 & 10.PPT - Download 


மின்னுருவாக்கம்‌ செய்யப்பட்ட கட்டகங்களில்‌ உள்ள செயல்பாடுகள்‌ ஒவ்வொன்றும்‌ 2௦ நிமிடத்தில்‌ செய்திடத்தக்க வகையில்‌ உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயல்பாடும்‌ பின்வருமாறு 5 பகுதிகளை உள்ளடக்கியதாக ஆகும்‌.

  • பகுதி :1 காணொலி பாடம்‌  (2 நிமிடங்கள்‌)
  • பகுதி : 2 தேவையான பொருள்கள்‌: (1 நிமிடம்‌)
  • பகுதி : 3 செயல்பாடு 1: அறிவுசார்‌ செயல்பாடு: (5 நிமிடங்கள்‌)
  • பகுதி : 4 சற்றே சிந்திப்போமா? (1 நிமிடம்‌)
  • பகுதி : 5 : பிரதிபலிப்பு மற்றும்‌ மதிப்பீடு: (6 நிமிடங்கள்‌)


அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ உயர்‌ நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ 9, 10ஆம்‌ வகுப்புகளுக்குக்‌ கற்பிக்கும்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 29.08.2023 முதல்‌ 31.08.2023 வரை நடைபெறும்‌ குறுவள மையப்‌ பயிற்சியில்‌ மனநலம்‌ மற்றும்‌ வாழ்வியல்‌ திறன்‌ சார்ந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது  ,

 ஆகஸ்ட்‌ மாதம்‌ முதல்‌ பிப்ரவரி மாதம்‌ முடிய கால அட்டவணைப்படி இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது.




எவ்வாறு மனநலம்‌   மற்றும்‌ வாழ்வியல்‌ திறன்‌ பயிற்சிகள்‌ நடத்துவது 


மனநலம்‌   மற்றும்‌ வாழ்வியல்‌ திறன்‌ ஆசிரியர் கையேடு -Teacher Manual Pdf  -Download 


  • ஒவ்வொரு மாதத்தின்‌ 4-வது வாரத்தில்‌ மாணவர்கள்‌ கற்க போகும்‌ செயல்பாடுகளை பற்றி முன்கூட்டியே ஆசிரியர்‌ கையோட்டில்‌ கொடுக்கப்பட்டுயுள்ள மாதிரி வினாக்களை கேட்டு மாணவர்களுடன்‌ வகுப்பறையில்‌ கலந்துரையாடி, அவர்கள்‌ கற்க போகும்‌ செயல்பாடுகளை பற்றி ஆயத்தப்படுத்துதல்‌ வேண்டும்‌

  • மாதத்தில்‌ நான்காவது வாரத்தில்‌ கால அட்டவணைப்படி ஆசிரியர்‌ மாணவர்களைச்‌ செயல்பாடுகளை செய்ய உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு நடத்தப்பட வேண்டும்‌

  • ஒவ்வொரு செயல்பாடுகளும்‌ முடிவுற்ற பின்னர்‌ மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு அவர்கள்‌ வினாக்களுக்கு தெரிவு செய்த விடைகளின்‌ அடிப்படையில்‌ கீழே குறிப்பிட்டுள்ள 5 நிலைகளுக்குள்‌ உள்ளடக்கப்படுவார்கள்‌. 

        அவையாவன

        1. செயல்திறன்‌ மிக்கவர்‌

        2. திறன்மிக்கவர்‌

        3. சராசரி திறன்‌ பெற்றவர்‌

        4. ஆலோசனை தேவைப்படுபவர்‌

        5. தொடர்‌ ஆலோசனை தேவைப்படுபவர்‌ என்பனவாகும்‌.


    இவற்றில்‌ 4 மற்றும்‌ 5 நிலைகளில்‌ உள்ளடக்கிய மாணவர்களுக்கு அவர்கள்‌ கற்றுக்கொண்ட செயல்பாடுகளில்‌ குறிப்பிட்டுள்ள வாழ்வியல்‌ திறன்‌ சார்ந்து கூடுதல்‌ ஊக்கம்‌ பெறத்தக்க வகையில்‌ தகுந்த வல்லுநர்களைக்‌ கொண்டு ஆலோசனை வழங்குதல்‌, அறிவுரை பகர்தல்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்‌ போன்றவற்றை தலைமையாசிரியர் மேற்கொள்ள வேண்டும்‌.