Senior Junior Pay Discrepancy Adjustment Concepts Guidelines |மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல்‌ சார்பான கருத்துருக்கள்‌ - பின்பற்ற வேண்டிய தெளிவுரைகள்‌


பள்ளிக்கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ வரும்‌ அனைத்து நிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல்‌ சார்பான கருத்துருக்கள்‌ - பின்பற்ற வேண்டிய தெளிவுரைகள்‌ தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ சுற்றறிக்கை -நாள்‌ 25:10.2023

பள்ளிக்கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ வரும்‌ அனைத்து நிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல்‌ தொடர்பான ஆணை வழங்கும்‌ நிருவாக அதிகாரம்‌ பெற்ற அலுவலராக பள்ளிக்கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர்‌ செயல்பட்டு வருகிறார்‌.

மூத்தோர்‌-இளையோர்‌ ஊதிய முரண்பாடுகள்‌ சார்ந்த கோரிக்கைகள்‌ மற்றும்‌ ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல்‌ சார்பான கருத்துருக்களை இவ்வியக்ககத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும்போது, கீழ்க்காணும்‌ காரணிகளின்‌ அடிப்படையில்‌ ஆய்வு செய்து அனுப்புமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


Senior Junior Pay Discrepancy Adjustment Concepts Guidelines For DSE Date :25.10.2023. Download 


1) பணியில்‌ மூத்தவரின்‌ ஊதிய முரண்பாடு சரிசெய்ய சார்ந்த அலுவலர்‌ நிலையிலேயே ஆய்வு செய்து உரிய விதிகளின்படி சரியாகயிருப்பின்‌: மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்‌.