அழகிய அமேசான் காடுகளே...!!
ஆக்சிஜன் வாழ்ந்திடும் வீடுகளே..!!
உயிர்கள் உலவிடும்..
கூடுகளே...!!
இயற்கை எழுதிடும்..
ஏடுகளே...!!
"பிரேசிலின்"பெருமைமிகு..பீடுகளே..!
பசுமை பரிணமிக்கும்...
"பாடுகளே"..!!
"தீ" ர்ந்தபின்தான் 
தெரியும் "கேடுகளே"!
காடுகள்காக்க கரம்கோர்ப்போம்..
உலக "நாடுகளே".!!
"உலகின் நுரையீரல்" 
நீங்கள் என்பது...
பொதுஅறிவு செய்தி.!
எங்கள் புதுஅறிவால்...
உன்னை காக்கமறந்தது....
யார் செய் "தீ"!!!
பத்துபண்ணிரெண்டு
தென்னைமரத்துக்கே
பராசக்தியை வேண்டிய பாரதி...
இன்றிருந்தால்..
இமைகள் நனைத்திருப்பான்..!!
சுமைகள் அணைத்திருப்பான்.!
வளங்குடிகளான...
"பழங்குடிகள்"...!!
நன்னீரில் நடனமிடும்
மீன்கள்...!!
சிறகு விரிந்த...
இறகு அணிந்த...
பறவைகள்..!!
விலங்கிக்கொள்ளாத
விலங்குகள்...!!
உறங்கும்...
குரங்குகள்...
"விழித்த"ஆந்தைகள்!
"பயந்த"பாம்புகள்"..!!
"கொழுந்துவிட்டெறியும்"குளிர்நீறூற்றுகள்..!!
"ஓங்கிவளர்ந்த"...
மரங்கள்..!!
தூங்கி வழியும்...
வனங்கள்...!!
இன்னும்.......
எழுதலாம்...
இதயம் பிசைகிறது..!!
இடப்பக்கம் அசைகிறது...!!
எங்கோ நடப்பதென்று...
இருந்திட வேண்டாம்..
மனிதர்களே..!!
"மனிதம்"வளர்க்கத்தான் மறந்துவருகிறோம்...!!
நாளை...
மனிதர்களையுமா?
அமேசான்..மீண்டுவர.
அழகோடு "மீண்டும்"வர....
என்..... அன்னைத்தமிழிலோர் ஆலாபனை..!!! 
என்றும் தாலாட்டும்...
எங்கள்..அமேசானை.!

         நெப்போலியன்
             ஆசிரியர்