தான் இந்த நிலைக்கு உயரக் காரணம் இவரென தனது ஆசிரியரை இந்த மேடைக்கு அழைத்து வந்து அவரது காலில் விழுந்து வழங்கிய 
*கரூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு.அன்பழகன்* அவர்கள்,
ஆசிரியர்கள் என்றாலே எனக்கு தனி மரியாதை என்றும் உண்டு எனப் பேசிய *மாவட்ட வருவாய் ஆய்வாளர்  திருமிகு.சூர்யபிரகாஷ்*
கல்விக்கு சேவை செய்வதே ஆகச்சிறந்த சேவை எனப்பேசிய 
*தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி முனைவர் இளங்கோ*
ஆசிரியர்களை அடையாளப்படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது பெரும்பாக்கியம் என உரைத்த *குமுதம்சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி*
இப்படியாக *கனவு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்* என அனைவரது அமர்வினாலும் அரங்கம் அழகானது..

நிச்சயமாக சொல்ல முடியும்.பங்குபெற்ற ஓவ்வொருவருக்கும் இது மறக்கமுடியாத நாளாக அமைந்திருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்..

நிகழ்வின் தொடக்கமாக *அனைத்து ஆசிரியர்களின் கரங்களாலும், ஆளுக்கொரு மரக்கன்றை நட்டுத் தொடங்கியது* சிறப்பான தருணமாகும்..


நன்றி...
*அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி*
*கரூர் வைஷ்யா வங்கி*
*திருமிகு.திலகவதி*
*திருமிகு.வெங்கடேசன்*
*திருமிகு.தேன்மொழி*
*திருமிகு.பூபதி*
*திருமிகு.வனிதா*