தேசிய திறனாய்வு தேர்வுக்கு மாணவர்களுடைய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அதில் மாணவர்களின் புகைப்படம் பெயர் தலைப்பெழுத்து பிறந்த தேதி முதலான விவரங்களை சரிபார்த்து ஒரு பொறுப்பாசிரியர் உடன் மாணவர்களை அனுப்பி வைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டு கொள்ளப் படுகிறார்கள். மேலும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதனை சரிசெய்து  புகைப்படம் இல்லாமல் இருந்தால் ஒரு புகைப்படம்  அதில் ஒட்டி கையொப்பமிட்டும்  மற்றொரு புகைப்படத்தினை தேர்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டு கொள்ளப் படுகிறார்கள். மாணவர்கள் கருப்பு நிற பந்து முனைப் பேனா BLACK BALL POINT PEN எடுத்துச்செல்ல அறிவுறுத்துமாறு  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். தேர்வு காலை 9 மணிக்கு துவங்க இருப்பதால் மாணவர்கள் 8 30 மணிக்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு சென்று அடைய ஏதுவாக உரிய அறிவுரைகளை வழங்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.