ஊரடங்கு முடிவடைந்த பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் உள்ள பருவமுறைத் தேர்வு, பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்தப்படும் என்று கூறியிருந்தது.

தொடர்ந்து, இந்தியவரில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஊரடங்கு சில பகுதிகளில் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கோரிக்கை விடுத்திருந்தார்

இதற்கு பதில் அளிக்கும் விதமாக சிபிஎஸ்இ, பொது ஊரடங்கு ஊரடங்கு முடிவடைந்த பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு அட்டவணை, தேர்வு தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.


Join Telegram& Whats App Group Link -Click Here