: வேலைவாய்ப்புத் துறை அறிவிப்புவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் (மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகம் மற்றும் சென்னை,மதுரையில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம்) 1-1-2011 முதல் 31-12-2015 வரையிலான காலகட்டத்தில் (2011-15) வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை அளிக்கப்படுகிறது.இந்த காலகட்டத்தில் (2011-15) பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து (22.8.2017) 3 மாதங்களுக்குள் ஆன்லைன் (https://tnvelaivaaippu.gov.in) மூலமாகவோ சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ புதுப்பிக்களாம்