உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 20 முக்கிய கேள்விகளை தமிழக அரசுக்கு எழுப்பினார். இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்த போது, தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகளை, அவர்கள் அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என கட்டயப்படுத்த முடியாது என குறிப்பிட்டது. கட்டமைப்பு வசதிகளுக்காக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க பெற்றோர்விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் அவர்களது குழந்தைகளை தாமாகவே முன்வந்து அரசு பள்ளியில் சேர்ப்பார்கள். பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்ற உரிமை அவர்களுக்கு உள்ளது எனகூறப்பட்டுள்ளது. மேலும் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, கடந்த 4 ஆண்டில் உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைப்பது என்பது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..