செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த குன்றுகள் இருப்பதை செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் நாசா உறுதி செய்துள்ளது.
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) பிடித்துள்ள புகைப்படத்தில் பனிக் குன்றுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கேமரா (High Resolution Imaging Science Experiment - HiRISE ) மூலம் மே மாதம் 21 ஆம் தேதி எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாயில் காணப்படும் பனி மலைகள், பூமியில் உள்ள பனி மலைகள் போல அல்லாமல், பனி மற்றும் கார்பன் டை ஆக்சைடு கலந்து உலர்ந்த பனிப் போல் காட்சியளிப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..