இன்று உலகளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் பொறுத்தவரை மிகப்பெரிய வளர்ச்சியடைந்துவருகிறது, மேலும் இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை சார்ந்த ஆராய்சி நிறுவனம் ஒன்று இளைஞர்களின் ரத்தத்தை முதியவர்களின் உடலில் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

ஆராய்சி நிறுவனம் இளைஞர்களின் ரத்தத்தை வயதான முதியவர்களின் உடலில் ஏற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது, இதில் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

எட்டாயிரம் டாலரகள்:
இந்த புதுமையான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒவ்வொருவரிடமும் எட்டாயிரம் அமெரிக்கா டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது,
100க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிளாஸ்மா:
ஆராய்சி நிறுவனம் குறிப்பிட்டபடி ஆய்வில் பங்கேற்ற முதியவர்களின் உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா திரவம் செலுத்தப்பட்டது.


ஸ்டாம்போர்டு:
இந்த புதிய மருத்தவ முறை பொறுத்தமட்டில் ஸ்டாம்போர்டு பல்கலைகழகத்தில் கடந்த 17ஆண்டுகளாக நடந்து வந்த ஆய்வில் உருவாக்கப்பட்டுள்ளது என பல்கலைகழகத்தை சார்ந்த ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

ஆராய்சியாளர்கள் :
இந்த சிகிச்சை பொறுத்தவரை முதியவர்களுக்கு நினைவாற்றல், இதய செயல்பாடு, நீரிழிவு நோய், தோற்றம் ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை:
இந்த சிகிச்சை பொறுத்தவரை பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.