சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி அலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூல மாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகின்றனர். சம்பளப் பட்டியல் தயாரிப் பது, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர் களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண்டர், வங்கிக் கடன், பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎஃப்) முன்பணம் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது முதலான பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள். நேரடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நியமன முறை முதல்முறையாக 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு 67 பேரும் தொடர்ந்து 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக நேரடி நியமனம் எதுவும் இல்லை. இந்த நிலையில், 38 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். நேரடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியைப் பொருத்த வரையில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும், பிஎட் பட்டம் பெற்றவர்கள் இதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35 ஆகும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..