பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதெரிவித்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் ஆசிரியர்கள் தின விழாவில் முதலமைச்சர்பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர். விழாவில் சிறப்பாகபணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.ஆசிரியர் தின விழாவில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஒழிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஆசிரியர்கள் தங்கும் இல்லம் ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டு 5.40 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. 3,336முதுகலை மற்றும் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 40,633 ஆசிரியர்கள், 15,153 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறைக்குரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.