7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து *அரசால் அங்கீகரிக்கப்பட்ட*
*149 அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன்*
கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்கப்பட்டது.
இதற்கிடையே, அண்மையில் முதலமைச்சருடன் ஈரோட்டில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முதலமைச்சரின் உறுதிமொழியை ஏற்று அரசால் அங்கீகரிக்கப் பட்ட சங்கங்கள் 85% போராட்டத்தை அக்டோபர் 15 வரை தற்காலிகமாக ஒத்தி வைத்தது.
புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்ட
7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது.
நிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் குறிப்பிட்ட சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..