ஆண்ட்ராய்டு ஃபோன்களின் மூலம் பணம் பறிக்க ஸ்சேஃப்காப்பி ட்ரோஜன் என்றமால்வேர்உலகம் முழுவதும் பரவி வருவதாக இணையதள பாதுகாப்பு நிறுவனமானகேஸ்பர்ஸ்கைஎச்சரித்துள்ளது.ஸ்சேஃப்காப்பி ட்ரோஜன் என்றமால்வேர், உங்களது ஆண்ட்ராய்டு ஃபோன்களில் க்ளீன் மாஸ்டர், பேட்டரி சேவர் போன்ற ஆப்கள் போன்று இருக்கும். இந்தமால்வேர், உங்களது ஃபோன் பணப் பரிவர்த்தனையை கண்காணிக்கும். பின்னர் உங்களுக்குத் தெரியாமலேயே பணத்தை திருடிக் கொள்ளும். இந்தமால்வேர்உங்களது ஃபோனில் ரகசியமாக சில தீங்கிழைக்கும் குறியீடுகளை செலுத்திவிடும். இதன் மூலமே நீங்கள் வேப் (WAP) மூலம் செய்யும்பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும். மேலும் இந்தமால்வேர்உங்கள் ஃபோனில் நுழைந்துவிட்டால், உங்களுக்குத் தெரியாமல் அது தாமாகவே சில தேவையில்லாத சேவைகளில் உங்கள் எண்ணை பதிவு செய்துவிடும். இதனால் உங்களின் ஃபோன் பில் கடுமையாக அதிகரிக்கும். கட்டணத்தை நீங்கள் கட்டாயம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உங்களுக்குதெரியாமல் மால்வேரால் பதிவு செய்யப்பட்ட அந்த சேவைகளுக்கான பணத்தைமால்வேர்அட்மின்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் 40 சதவீதத்தினரின் ஃபோன்கள் இந்த மால்வேரால்
பாதிப்படைந்துள்ளதாககேஸ்பர்ஸ்கைகூறுகிறது. இந்த ஸ்சேஃப்காப்பிமால்வேர்ஒரே மாதத்தில், 47 நாடுகளில், சுமார் 4800 ஃபோன்களை தாக்கியுள்ளது.இதில் 37.5 சதவீத தாக்குதல்களை தடுத்துள்ளதாககேஸ்பர்ஸ்கைநிறுவனம் தெர்வித்துள்ளது. இந்த ஆபத்தானமால்வேரிலிருந்து உங்கள் ஃபோனை காப்பாற்றிக்கொள்ள, மூன்றாம் தர ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றுகேஸ்பர்ஸ்கைகூறியுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..