தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்துப் பதிலளிக்க சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அரசு தரப்பில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன் பங்களிப்பு ஓய்வூதியம் பற்றியும் , அதில் அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை, நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் மற்றும் அரசு கூடுதல் வழக்குரைஞர் ஆகியோர் ஆஜராகி நிதித்துறை (செலவினப் பிரிவு) செயலாளர் எம்.ஏ.சித்திக் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தனர்.
அதில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்காக ஒவ்வோர் அரசு ஊழியரும் தனது மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 சதவீதத்தை பங்களிப்பாகச் செலுத்தி வருகின்றனர். ஊழியர்களின் பங்களிப்புத் தொகையோடு, அரசும் தன் பங்களிப்பை தவறாமல் பொதுக் கணக்கில் செலுத்தி வருகிறது. கடந்த 2017 மார்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 18 ஆயிரத்து 16 கோடியாக உள்ளது. 2016-2017 ஆம் ஆண்டுக்கான கணக்கு விவரங்களும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு, திடீர் மரணம், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு உடனடியாக அவர்களின் கணக்கு முடிக்கப்பட்டு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.கருவூல கணக்குத்துறை அறிக்கையின்படி கடந்த ஆக. 31-ஆம் தேதி வரை தன் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கை முடித்து வழங்கக்கோரி 7,409 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதன்படி ஓய்வுபெற்ற, ராஜினாமா செய்த மற்றும் இறந்த ஊழியர்களின் சார்பில் 3,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.125 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 317-க்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் தொய்வின்றி தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி, வரும் செப்.22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..