தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை முதல் (செப்.19) தொடங்க உள்ளது.
பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். இந்தப் பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், பி.பி.டி. (இயன்முறை மருத்துவம்) ஆகிய மூன்று படிப்புகளிலும் தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.