போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசின் சார்பில் வட சென்னையில் பயிற்சி மையம் தொடங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கடந்த சட்டசபை கூட்டத் தொடரில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில், மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் அரசின் சார்பில் பயிற்சி மையம் ஒன்று துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த பயிற்சி மையம் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வட சென்னையில் இந்த ஆண்டு துவக்கப்படும். இப்பயிற்சி மையத்தில், போட்டித் தேர்வுகளை, திறமையாக எதிர்கொண்டுஅவற்றில் தேர்ச்சி பெறும் வகையில், முறையான பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும், 500 மாணாக்கர்கள் என்ற வீதத்தில், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய, மாநில துறைகள், வங்கி தேர்வுகளை சந்திக்க ஏற்கும் வகையில் பயிற்சியளிக்கப்படும் என்று தெரிகிறது.