.ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி -   திட்டமிட்டப்படி தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவாரத்தை தோல்வியடைந்தது. கோரிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள்நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே முதல்வரிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களது முடிவையும் பின்னர் தெரிவிப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து விவாதிக்கவும் ஆலோசிக்கவும் இன்று மாலை 5 மணிக்கு அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூடியது.இக்கூட்டத்தில்  திட்டமிட்டப்படி தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது