வாஷிங்டன்: விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் ‛டி.சி.,4' விண்கல் இன்று(அக்.,12) பூமியை கடந்து செல்ல உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 15 முதல் 30 மீ., அகலம் கொண்ட இந்த விண்கல், பூமியிலிருந்து சுமார் 42,000 கி.மீ., தொலைவில் கடந்து செல்லும் இந்நிகழ்வினால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் வரப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.