தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை முடிந்து வடகிழக்குப் பருவ மழை தொடங்கவிருக்கும் நிலையில் அனைத்து மக்களுக்கும் ஒரே ஒரு வார்த்தை... ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்போம் என்பதே அது.
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அதிமுக அரசு மிகச் சிறப்பாகக் கொண்டு வந்து செயல்படுத்தியது. ஆனால், தற்போது அதற்கு மக்கள் அந்த அளவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும் போது வெள்ளம், கோடை காலத்தில் வறட்சி என புலம்பும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். சென்னையில் மழை பெய்வதைப் பற்றி ஏன் பெரிதாகப் பேசுகிறீர்கள். அங்கு பெய்யும் மழை கடலில்தான் கலக்கிறது என்று விவசாயத்தை முக்கிய வாழ்வாதாரகமாகக் கொண்டிருக்கும் மாவட்ட மக்கள் கூறுவது வழக்கம்.
அவர்கள் சொல்வது போல், சென்னையில் மண் தரையும் இல்லை. மழை நீரை சேகரிக்க குளங்களும், ஏரிகளும் கூட விட்டுவைக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது ஒரே ஒரு வழி மழை நீர் சேகரிப்பு என்பதே.
மழை நிலவரம் குறித்து பொதுமக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகத் தகவல்களை பரிமாறி வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் நேற்று தனது பேஸ்புக்கில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
அதாவது, தண்ணீர் என்பது விலைமதிப்பற்றது. இன்று முதல் அதனை சேமியுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால், இப்போதில் இருந்தே தண்ணீரை சேமிப்போம். கோடைக்காலம் தொடங்கும் மே மாதத்தில் அல்ல. இனிமேல், நிலத்தில் விழும் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் மிக முக்கியமானது. இனி அக்டோபர் மாதம் 15க்குப் பிறகுதான் மழைக்கான வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீரை வீணடிக்காதீர்கள். எல்லோருடைய வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி இல்லை என்றால் உடனடியாக அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசுக்காகவோ, யாருக்காகவோ செய்ய வேண்டும் என்று நினைக்காமல், நமக்காக, முற்றிலும் நமக்காக மட்டுமே மழை நீர் சேகரிப்பு என்று உணர்ந்து செயல்படுவோம்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..