சென்னை: பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
லாபம் ஈட்டிய நிறுவன ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 20 சதவீதமும் , நஷ்டம் அடைந்த நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ், கருணைத்தொகை வழங்கப்படும். மின்சாரம், போக்குவரத்து, கூட்டுறவு துறை, பாடநூல் கழகம் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 69 ஆயிரத்து 610 தொழிலாளர்கள் போனஸ் பெறுவர். மொத்தம் அரசுக்கு ரூ. 489 . 26 கோடி செலவாகும். போனசாக நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக 8 ஆயிரத்து 400 முதல் அதிகப்பட்சம் 18, 800 வரை கிடைக்கும்.
வீடு, குடிநீர், கழிவு நீரகற்று ஊழியர்களுக்கு 10 சதவீத போனசும், ரப்பர்கழகம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனசும் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..