பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான, கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவுஅறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..