வாஷிங்டன்: நாசா எச்சரிப்பதாக அவ்வப்போது போனில் வருமே அந்த போலி வார்னிங் மெசெஜ் அல்ல இது. உண்மையிலேயே சூரியனில் பெரிய ஓட்டை விழுந்துள்ளதாக எச்சரித்துள்ளது நாசா.
சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதாகவும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரியக் காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஆய்வு பீதியை அதிகரிப்பதாக உள்ளது. இருப்பினும் பூமிக்கு உடனடியாக எந்த பாதிப்பும் இல்லை.
சூரிய ஆய்வு
படம் வெளியானது
நாசாவின், சூரிய இயக்கவியல் ஆய்வு மையம், சூரியனின் மேற்பரப்பை கடந்த 8ம் தேதி படம் பிடித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த புற ஊதா படத்தில், கருப்பாக மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

காற்று வெளியேற்றம்
அடர்த்தி குறைவு
இந்த ஓட்டை வழியாக சூரிய வெப்பக் காற்று அதிவேகத்தில் வெளியேறுகிறது. இது கண்ணை கவரும் காட்சியாக உள்ளது. சூரியனின் காந்தபுல இயக்கம் காரணமாக இந்த ஓட்டைகள் ஏற்படுகிறது. அதில் இருந்து வெளிப்படும் சூரிய பிழம்புகள், கரோனா எனப்படும் பகுதிக்குள், தற்காலிக ஓட்டைகளை ஏற்படுத்தும். சூரியனை சுற்றியுள்ள மற்ற பகுதியைவிட, இது அடர்வு குறைவான பகுதியாக உள்ளது.

அதி வேகம்
அதிக வேகம்
வழக்கமான சூரியகாற்றை விட, இந்த ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய ஒளிக்கற்றை துகள்கள் அதிவேகமாக வெளியேறுகிறது என விண்வெளி வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது.

ஓட்டை விழ வாய்ப்பு
பல ஓட்டைகள்
இந்த அதிவேக ஒளிக்கற்றை, பூமியின் காந்த மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் செயற்கைகோள்களும், சூரிய மின்சக்தி கருவிகளும் ஸ்தம்பிக்கின்றன. சூரிய சுழற்சி காரணமாக இன்னும் பல கரோனா ஓட்டைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என விண்வெளி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.