சென்னை: இந்தி மொழியை அனைவரும் கற்றுக் கொள்ள பல்கலை.,களிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும், அனைவருக்கும் இந்தி மொழி தெரியும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளும், அனைத்து மாநிலங்களிலும், ஆங்கிலத்துடன், கட்டாயமாக, இந்தியிலும் இடம் பெற உத்தரவிடப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைகளில் இந்திக்கும் முக்கியத்துவம் தர மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் பட்டம் பெறும் பட்டதாரிகள் அனைத்து மாநிலங்களிலும் வேலை வாய்ப்புகளை பெறும் வகையில், அவர்களுக்கு இந்தி கற்றுத்தர உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, விருப்ப மொழி பாடமாக, முதுநிலை மாணவர்களுக்கு, இந்தியை அறிமுகம் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, சென்னை பல்கலையில், இந்தி திட்டம் அமலுக்கு வர உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.