திருவாரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே கனமழை கொட்டி வருகிறது. இதனால் இன்று அம்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை வெளுத்துவாங்கி வருவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில்  நேற்று பகலிலும், இரவிலும் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை கொட்டி வருகிறது.
திருவாரூர், நன்னிலம், குடவாசல், மன்னார்குடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்து வருகிறது.
ஏற்கனவே இம்மாவட்டத்தில் 60000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் இந்த கனமழை மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

அறிவியல் ஆசரியர்களுக்கான            RMSA   பயிற்சி வழக்கம் போல் திருவாருர் மன்னார்குடி மையங்களில் நடைபெறும்