150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வானியல் அற்புதமான 'சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்' வரும் ஜனவரி 31ஆம் தேதி நிகழவுள்ளது.
பூமியின் நிழலில் நிலவு கடந்து போகும் நிகழ்வே, 'ப்ளூ மூன்' சந்திர கிரகணம் எனப்படுகிறது. மிகவும் அரிதான நிகழ்வான இது, 150 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழும் என கூறப்படுகிறது. கடந்த 1886ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதி நிகழ்ந்த இந்த 'ப்ளூ மூன் சந்திர கிரகணம்', தற்போது மீண்டும் வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ப்ளூ மூன் சந்திர கிரகணம் அப்படி என்ன ஸ்பெஷல் என கேட்கலாம். சந்திரன், பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டிருக்கும். இதன் மூலம், வழக்கமான நிலவொளியை விட 14 சதவித கூடுதல் வெளிச்சத்தை நாம் காண முடியும். மேலும் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையே முழு நிலவினைக் காண முடியும். ஒவ்வொரு முழு நிலவும் 29 நாட்களுக்கு ஒரு முறையே காண முடியும். ஆனால், ஜனவரி 1ஆம் தேதியே தோன்றிய முழு நிலவு, மீண்டும் மாதக் கடைசியான 31ஆம் தேதி தோன்ற உள்ளது.

இதுவே 'ப்ளூ மூன்' என்று கூறப்படுகிறது. இதனால் சந்திர கிரகணத்துலேயே 'சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்' ஸ்பெஷல் எனலாம்