சேவை மையங்கள்தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி  மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு ஜன.,4 முதல் ஜன.,6ம் தேதி வரை நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.தனியார் Browsing Centreகள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியதுக் கொள்ளலாம்.தேர்வு கட்டணம்தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை Registration Slipல் குறிப்பிடப்பட்டிருக்கும்.‘எச்’ வகை தனித்தேர்வர்கள் (H) ஒரு பாடத்திற்கு - ரூ.50 (இதர கட்டணம் ரூ.35/-)‘எச்.பி’ வகை (HP) நேரடித் தனித்தேர்வர்கள் - ரூ.150 37=ரூ.187/-இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000/- மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ.50/- ஐ பணமாக மட்டுமே அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.ஆவணங்கள்’H’ வகையினர்உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணத்தினை சேவை மையங்களில் (Service Centre)  பணமாக செலுத்த வேண்டும்.மதிப்பெண் சான்றிதழ் ஒளிநகல் (இதுவரை எழுதிய மேல்நிலைத் தேர்வுகளுக்கானது).பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவராக பதிவு செய்யப்பட்டு தேர்வெழுதாதவர்களுக்கு மட்டும்).செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங்களைத் தேர்வெழுதுவோர் மட்டும்)’HP’ வகையினர்உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணத்தினை சேவை மையங்களில் (Service Centre) பணமாகச் செலுத்த வேண்டும்.பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ். (அல்லது) பத்தாம் வகுப்பிற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் சான்றிதழ் மற்றும் அச்சான்றிதழ் பத்தாம் வகுப்பிற்கு இணையானதது தான் என்பதற்கான இணைச்சான்றிதழ் (Equivalence Certificate) கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.பள்ளி மாற்று சான்றிதழின் அசல் இடப்பெயர்வு சான்றிதழ் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்) அனுமதி சீட்டுதேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி (தேர்வுக் கட்டண விவரம் தவிர்த்து) வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.