பிளஸ் 1 செய்முறை தேர்வு அகமதிப்பெண் விபரங்களை பதிவு செய்து இயக்குனரகத்தில் ஒப்படைக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு இக் கல்வியாண்டு முதல் முறையாக செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.இத்தேர்வு பிப்., 16ல் துவங்கி 28 ம் தேதி வரை நடக்கிறது. செய்முறை தேர்வு 30 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.மாணவர் வருகையை கல்வியாண்டின் ஆரம்ப நாள் முதல் 31.1.2018 தேதி வரை கணக்கிட்டும் 3 மதிப்பெண் வழங்கப்படும்.

தலைமையாசிரியர்கள் பிளஸ் 1 மாணவர்களின் பெயர் பட்டியலை பெற்று அக மதிப்பெண் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மதிப்பெண்களை பதிவு செய்தபட்டியலை தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் பிப்.6 முதல் 13 ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யவேண்டும். மார்ச் 15 முதல் 23 ம் தேதி வரை இணையதளத்தில் மதிப்பெண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அகமதிப்பீட்டு பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் மார்ச் 26 ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.மாவட்ட கல்வி அலுவலர்கள், மண்டல தேர்வு துணைஇயக்குனரிடம் மார்ச் 28 ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை ஒப்படைக்க வேண்டும். மண்டல துணை இயக்குனர்கள் அகமதிப்பீடடு பட்டியலை ஏப்ரல் 2 ம் தேதி தேர்வு துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.