வரும் மார்ச்சில் நடக்கவுள்ள பிளஸ் 2 பொது தேர்வில், தனித்தேர்வர்கள் நேரடியாக
பிளஸ் 2 தேர்வு எழுத, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.இதன் விபரங்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு நிறைந்தவர்கள், இந்த தேர்வை எழுதலாம்.

இந்த ஆண்டில் இருந்து, பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அடுத்த ஆண்டில் இருந்து, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். எனவே, 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 வை நேரடியாக எழுத, இந்த ஆண்டே கடைசிவாய்ப்பு என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ள சேவை மையங்களில், இன்று முதல் வரும், 16 வரையிலும், பின், 18 முதல், 20ம் தேதி வரையில், அபராத கட்டணத்துடனும் விண்ணப்பிக்கலாம்.                  குறிப்பு:- 2016 ஜூன் மாதத்திற்கு முன் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அவர்கள் மட்டுமே நேரடியாக இந்த 12ம் வகுப்பு தேர்வு  எழுத முடியும். மற்றவர் 11ம் வகுப்பு தேர்வு எழுதிய பிறகே 12ம் வகுப்பு எழுத முடியும்