பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகப்படுத்த
போவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்  திரு.உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் பள்ளிகளில் நவீனத்தொழில்நுட்பத்திலான பலகைகள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும்,  முதற்கட்டமாக 25 கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு முன்னோடியாக மடிக்கணினி அளிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக  ஸ்மார்ட் போர்டுகள் நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு ஏற்கனவே சிபிஎஸ்சி ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.