9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 25% முதல் 30%  வரை தள்ளுபடி விலையில் சீருடைகள் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.