ஆன்ட்ராய்டு என்பது ஒரு பாதுகாப்பு இல்லாத தளம் என்று அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் அது போன்ற பாதுகாப்பின்மை பிரச்சனைகளில் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. ஆன்ட்ராய்டு 6.0 மார்ஷ்மாலோவில் அளிக்கப்பட்டுள்ள புதிய அனுமதிகளுக்கான அமைப்பு, இதை சாத்தியப்படுத்தி உள்ளது. முன்னதாக, ஒரு அப்ளிகேஷனை நிறுவுவதற்கு, பல்வேறு விதமான காரியங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டிய தேவை யாருக்கும் இருக்கவில்லை.
தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆன்ட்ராய்டின் நவீன பதிப்புகளில், எந்தெந்த டேட்டாக்களை அப்ளிகேஷன்கள் அணுகலாம் என்பதை தீர்மானிக்கும் அனுமதியை அளிக்கும் உரிமை பயனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்ளிகேஷனுக்கான அனுமதிகளை அளிக்கும் சுதந்திரத்தை பயனருக்கே அளிப்பதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் டேட்டாவை அணுகுவதற்கு, குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமா? என்ற காரியத்தில், உங்கள் மன விருப்பம் போல செயல்படலாம். இந்த ஆன்ட்ராய்டு அமைப்பிற்கு அனுமதி அளிப்பது சற்று புதிதாக இருப்பதால், இதை குறித்து எல்லா காரியங்களை நாங்கள் கீழே அளிக்கிறோம்.
அப்ளிகேஷன் அனுமதிகள் அளிப்பதால் பயன் என்ன?
உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள ஏறக்குறைய எல்லா அப்ளிகேஷன்களும், தகுந்த முறையில் இயங்குவதற்கு பல்வேறு விதமான தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, கூகுள் மேப்ஸை பயன்படுத்தும் போது, உங்களுக்கு சரியான வழியை காட்ட வேண்டுமானால், நீங்கள் இருக்கும் இருப்பிடத்தை அப்ளிகேஷன் அறிய வேண்டும்.
உங்கள் இருப்பிடத்தை குறித்து தகவலை பெறுவதற்கு அனுமதி அளிக்காமல், கூகுள் மேப்ஸை பயன்படுத்துவதில் எந்த பயனும் இல்லை. முன்னதாக, தங்கள் அப்ளிகேஷன்கள் தகுந்த முறையில் செயல்படுவதற்கு தேவையான தகவல்களை டெவலப்பர்கள் அணுகுவதற்கு, ஆன்ட்ராய்டு அனுமதி அளித்து வந்தது.
ஆனால் இப்போது இது போன்ற தகவல்களை அணுகுவதற்கு அனுமதிப்பது, பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே குறிப்பிட்ட தகவல் அப்ளிகேஷனுக்கு அளிக்க தேவையில்லை என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில், தற்போது அதற்கான அனுமதியை மறுப்பதை தேர்ந்தெடுக்க முடியும். இந்த தகவலை அணுவதற்கு அனுமதி அளிப்பதாக, நீங்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.


அப்ளிகேஷன் அனுமதிகளை நிர்வகிப்பது எப்படி?
குறிப்பிட்ட அப்ளிகேஷனை நிறுவும் போதே, அதற்கான அனுமதியை அளிப்பதை நீங்கள் நிர்வகிக்க முடியும். அப்போது அப்ளிகேஷனுக்கான அனுமதிகளுக்கு 'அனுமதி' அல்லது 'நிராகரி' என்று உள்ள தேர்வுகளில், தகவல்களைப் பெற அனுமதிக்கவோ அல்லது நிராகரிப்பதையோ தேர்ந்தெடுக்க முடியும்.
இது ஒரு எளிய முறை. ஆனால் ஏற்கனவே நீங்கள் எடுத்த தீர்மானத்தில் தற்போது மாற்றம் செய்ய வேண்டிய வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்வது? ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனுக்கு நீங்கள் அளித்த அனுமதிக்கான நிலை மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றினால் போதுமானது.
படி 1: 'அமைப்புகள்' பகுதிக்கு செல்லவும்.
படி 2: 'ஆப்ஸ்' என்பதை கிளிக் செய்யவும். இதன்மூலம் உங்கள் ஆன்ட்ராய்டு ஃபோனில் நிறுவப்பட்டுள்ள அப்ளிகேஷன்களின் பட்டியல் திறந்து காட்டப்படும்.
படி 3: எந்த அப்ளிகேஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை நிர்வகிக்க விரும்புகிறீர்களோ, அதன் மீது தட்டவும்.
படி 4: 'அனுமதிகள்' என்பதன் மீது தட்டவும்.
அந்த அப்ளிகேஷனுக்கு தேவைப்படும் அனைத்து அனுமதிகளும் அடங்கிய பட்டியல் இப்போது உங்களுக்கு காட்டப்படும். அதில் எந்தெந்த அனுமதிகளுக்கு நீங்கள் அனுமதி அளிக்க மற்றும் மறுக்க விரும்புகிறீர்களோ, அதற்கு ஏற்ப அதற்கு அருகே உள்ள ஆன் மற்றும் ஆஃப் நோக்கி தள்ளவும். நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவு தான், இது ஒரு எளிதான முறை தானே?
இந்த பக்கத்தின் மேல்பக்க வலது பகுதியில் உள்ள கிடைமட்டமான மூன்று புள்ளிகளின் மீது தட்டுவதன் மூலம் அந்த அப்ளிகேஷனுக்கு நீங்கள் அளித்துள்ள அனைத்து அனுமதிகளையும் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். அதன்பிறகு, 'அனைத்து அனுமதிகள்' என்பதை தட்டவும்.
இப்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவில் இருந்து பெறப்படும் அனுமதிகளின் மூலம் அந்த அப்ளிகேஷன் செய்ய உள்ள காரியங்களை குறித்த ஒரு விரிவான பட்டியல் உங்களுக்கு அளிக்கப்படும். இந்தப் பட்டியலை பார்த்தால், அந்த அப்ளிகேஷன் எதற்காக அனுமதி கேட்கிறது என்பது உங்களுக்கு தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.


முடிவுரை
உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைக்கும் வகையில், ஆன்ட்ராய்டு ஒரு சிறந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆன்ட்ராய்டு மார்ஷ்மாலோ மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில், இந்த புதிய அனுமதி அளிக்கும் அமைப்பு அளிக்கப்பட்டுள்ளதை குறித்த உங்கள் கருத்து என்ன? தனது பயனர்களுக்கான கூடுதல் பாதுகாப்பை அளிக்க, ஆன்ட்ராய்டு இன்னும் மேம்பாடுகளை அளிக்க வேண்டும் என்று நினைத்தால், அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.