2018-2019ம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மே முதல் வாரத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துவருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 534 பொறியியல் கல்லூரிகளில் பி.இ மற்றும் பி.டெக் படிப்பில் சேர இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்வதற்காக 42 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மாணவர்கள் ப்ளஸ் 2 மதிப்பெண் இல்லாமலே கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதனைபோல் கலந்தாய்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே அந்தந்த மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளார்கள், இதனால் வெளியூர் மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு சென்னை வர வேண்டியதில்லை, ஆனால் விளையாட்டு மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள்,  தொழில்கல்வி ஆகிய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்தான் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.